செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

புரட்சிகர உணர்வை கிளர்த்திவிடும் புத்தகம்!

23 வயதில் உயிரை தேசத்துக் காக தியாகம் செய்த பகத்சிங் உடலால் மறைந்து இந்த (2009) ஆண்டோடு 78 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அவரது ஒளி வீசும் தியாகத்தின் மகத்துவம் மென்மேலும் பிரகாசித்து வரு கிறது. அவரது நினைவைப் போற் றும் வகையில், பேராசிரியர் எஸ். இர்பான் ஹபீப் எழுதி அண்மை யில் பாரதி புத்தகாலயம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள ‘பகத் சிங்: விடுதலைப்போரில் புரட்சி இயக்கம்’ நூல் சிறப்பு வாய்ந்த தாக உள்ளது.

நெடிய வரலாறு கொண்ட இந் திய விடுதலைப் போர் பல்வேறு போக்குகளை அனுபவமாகக் கொண்டிருந்தது. அதில் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் வரு கையும், கொள்கையும், கண் ணோட்டமும், வீரஞ்செறிந்த தியா கமும் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தின.

நவஜவான் பாரத் சபா, இந் துஸ்தான் குடியரசு சங்கம், இந் துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் ஆகிய புரட்சிகர இயக்கங் களின் வருகை இந்திய விடுத லைப் போருக்கு பண்புரீதியான ஒரு மாற்றத்தைக் கொடுத்தன. அந்த அமைப்புகள் களத்துக்கு வருவதற்கு முன்பு வரை இந்திய தேசிய காங்கிரஸ் ‘முழு விடுதலை’ என்ற முழக்கத்தை எழுப்பவே இல்லை. அதுமட்டுமின்றி பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு தொங்கு சதையாகத் திகழும் ‘டொமினியன் அந்தஸ்து’ அல்லது சில சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதே காங்கிரசின் கெஞ்சலாக இருந்தது.

அதுவரை பொதுப்படையாகத் தொடர்ந்து கொண்டிருந்த ஏகாதி பத்திய எதிர்ப்புப் போருக்கு இந்த தருணத்தில்தான் பகத்சிங் தோழர் களின் புரட்சிகர இயக்கங்கள் ஒரு தீர்மானகரமான உள்ளடக்கத் தைக் கொடுத்தன. இந்தியாவுக்கு முழு விடுதலை வேண்டும் என்பது மட்டுமல்ல; அந்த விடுதலை என் பது அரசியல் சுதந்திரத்தை கைமாற்றி விடுவதாக இல்லாமல்; விவசாயிகள், தொழிலாளர்களின் அடிமை விலங்கொடித்து ஒரு சோசலிச சமூகமாக மாற வேண் டும் என அந்தப் புரட்சியாளர்கள் தீர்மானித்தனர்.

இந்தியாவின் எதிர்காலம் பற்றி அந்த புரட்சியாளர்களின் தீர்க்க மான பார்வையும், செயல்பாடும் ஒட்டுமொத்த விடுதலைப் போரி லும் அலை, அலையாக தாக்கம் செலுத்தின. காங்கிரசுக்கு உள் ளேயும் அவர்களின் செல்வாக்கு பரவி, எண்ணற்றவர்களை ஈர்த் தது. இதைப் பற்றி நூலாசிரியர் எஸ்.இர்பான் ஹபீப் ஏராளமான சான்றுகள், ஆதாரங்களுடன் இப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

“பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் முயற்சியால் இந் துஸ்தான் குடியரசு சங்கம் ஒரு மேம்படுத்தப்பட்ட சோஷலிச மற் றும் சர்வதேச கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டு 1928ம் ஆண்டு தேசிய புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு திசைகாட்டி நிலையைப் பெற்றது.” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த புரட்சிகர இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக விளக்கியுள்ள ஆசிரியர் அந்த இயக்கத்தின் பலவீனத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. “ஏகாதிபத்தியம் ஒழிக, புரட்சி நீடூழி வாழ்க” என முழக்கங்கள் எழுப்பியதுடன், விவசாயிகளை யும், தொழிலாளர்களையும் அமைப்புரீதியாக அணிதிரட்டவும் எண்ணினர். எனினும் கீழ்த்தட்டு மத்தியதர வர்க்க இளைஞர்கள் தான் பெருமளவு அணிதிரண்டு வந்தனர். விவசாயிகள், தொழிலா ளர்களை பெருமளவு அமைப்பு ரீதியாக திரட்ட இயலவில்லை என்று ஆசிரியர் மதிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், “அன்றிருந்த நிலைமைகளின் பின்னணியில் சாதக, பாதக அம்சங்களை ஒப் பிட்டுப் பார்த்தோமானால் புரட்சி யாளர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு, அவர்களது குறைகள், பலவீனங்கள், தவறுகளைவிட பெரிதாக இருப்பதைக் காண முடியும். பெருந்திரளான மக்களின் தேசியப் போராட்டமே கரு மட் டத்தில்தான் இருந்தது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் தன்னு ணர்வுடன் அரசியல் போராட்டங் களில் பங்கேற்க ஆரம்பித்திருந் தார்கள். இந்தச் சூழ்நிலைமை யில் புரட்சியாளர்கள் ஆயுதப் போராட்டம் மூலம் பூரண விடு தலைக்கான யுத்தத்தைப் பிரகட னம் செய்தார்கள். இதுவே பெரு மதிப்பு மிக்க பங்களிப்பாகும்.” என்று அவர் புகழுரை சூட்டுகிறார்.

“நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி உயிரைத் தியாகம் செய்த இந்தப் புரட்சியாளர்கள் வெறுமனே சாகச மனோபாவம் கொண்டவர்கள் அல்ல; அதை விட முக்கியமாக சுதந்திர இந்தி யாவை மதச்சார்பற்ற, சோஷலிச மற்றும் சமத்துவ சமுதாயமாக மாற்ற வேண்டும் என்கிற புரட்சிகர லட்சியம் கொண்டிருந்தனர். பகத் சிங்கும் அவரது சகாக்களும் தூக்கிலிடப்பட்டதால் நாம் வெறும் தனிநபர்களை, அவர்கள் எவ்வளவு மதிப்பு மிக்கவர்கள் என்றபோதும், அவர்களை மட்டும் இழக்கவில்லை; சுதந்திர இந்தியா வை நிர்வகிப்பதற்கான ஒரு மாற் றுத் திட்டத்தை நாம் இழந்துவிட் டோம்.” என்று பேராசிரியர் இர்பான் ஹபீப் குறிப்பிடுவதை படிக்கும் போது நம் மனதும் ஆம் என ஒப்புக் கொள்கிறது.

இந்தப் புத்தகத்தை அசோகன் முத்துசாமி நல்ல முறையில் தமிழ் படுத்தியுள்ளார். இந்தியா வின் எதிர்காலத்தை சோசலிசப் பாதை யில் புரட்சிகரமாக மாற்ற வேண் டும் என உந்துதலோடு பணியாற் றும் ஒவ்வொரு இளைஞரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம் இது!

பகத்சிங்: விடுதலைப் போரில் புரட்சி இயக்கம், எஸ்.இர்பான் ஹபீப். தமிழில்: அசோகன் முத்து சாமி. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வெளியீடு. பாரதி புத்தகாலயம், 7 இளங்கோ தெரு, சென்னை - 600018. பக்.160, விலை ரூ.70/-